Menu
For Donation

14 Jan 2026 – சிப்பந்திகளுக்கு பொங்கல் பானை பொருட்கள் விநியோகம், காஞ்சி மகா பெரியவருக்கு அபிஷேகம்

March 15, 2026 | News

உ சிவமயம் இன்று நமது இளையாத்தக்குடி ஒக்கூர் நகரத்தார் அசோசியேசன் சார்பாக நமது சிப்பந்திகளுக்கு பொங்கல் பானைக்கு மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஏலம், முந்திரி, கரும்பு இவை அனைத்தும் நமது காரியக்காரர்கள் ஆ. சண்முகநாதபுரம் திரு. S பழனியப்ப செட்டியார் அவர்களும் கண்டவராயன்பட்டி திரு. S சுப்பிரமணியன் செட்டியார் அவர்களால் கொடுக்கப்பட்டது. உபயதாரர்கள்: K. சோமசுந்தரம் செட்டியார் குடும்பத்தார்கள் தேவகோட்டை.

Read More

01 Jan 2026 கணபதி ஹோமம்

March 15, 2026 | News

உ சிவமயம்கைலாச விநாயகர் துணை இன்று நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு காலையில் கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் மிக சிறப்பாக நடைபெற்றது. உபயதாரர்கள்: VPL. பழனியப்ப செட்டியார் குழுவினர்.

Read More

06 Jan 2026 – சங்கடகர சதுர்த்தி

March 15, 2026 | News

உசிவமயம். சுபஸ்ரீ விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 22ஆம் தேதி 6.1.2026 வியாழக்கிழமை சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு மாலை 6 மணி அளவில் இரண்டு கும்பம் வைத்து ஜெபம், அபிஷேகம் மற்றும் கோபூஜை தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது, இரவு உணவு நமது விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது.உபயதாரர்கள்.தேவகோட்டை இராம.சொக்கலிங்கம் செட்டியார் குடும்பத்தார்கள்மகிபாலன்பட்டி S. ஏகப்ப செட்டியார் குடும்பத்தார்கள்வலையப்பட்டி அண. சிவப்பிரகாசம் செட்டியார் குடும்பத்தார்கள்.

Read More

18 Dec 2025 – 60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி விழா

March 14, 2026 | News

உ சிவமயம் இன்று நமது ஒக்கூர் நகர விடுதியில் நமது பங்காளி ஒ.சிறுவயல் திரு. தில்லைநாதன் செட்டியார்சாந்தி ஆச்சி அவர்களின் 60 ஆம் ஆண்டு சஷ்டியப்த பூர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.நமது அசோசியேஷன் சார்பாக கைலாச விநாயகரின் காலாஞ்சி பிரசாதமும் கைலாச விநாயகர் படமும் நமது ஒ. சிறுவயல் பங்காளிகள் மற்றும் விராமதி பங்காளிகள் அனைவராலும் கொடுத்து மரியாதை செய்யப்பெற்றது. விழாவிற்கு வந்திருந்த ஒ.சிறுவயல் ஒக்கூர் பங்காளிகள் அனைவரையும் காரியக்காரர் திரு S. நாகராஜன் அவர்கள் […]

Read More

14 Dec 25 – 60ம் ஆண்டு சஷ்டியப்தபூர்த்தி விழா

March 14, 2026 | News

உசிவமயம்.கைலாச விநாயகர் துணை. இன்று நமது ஒக்கூர் நகர விடுதியில் இளையாத்தக்குடி கழனிவாசல்குடியார். விராச்சிலை திரு. இராம. அடைக்கலவன் செட்டியார் மீனாள் ஆச்சி அவர்களின் 60ம் ஆண்டு சஷ்டியப்தபூர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது.நமது அசோசியேஷன் சார்பாக நம் கைலாச விநாயகரின் காலாஞ்சி பிரசாதமும் கைலாச விநாயகர் படமும் அவர்களுக்கு கொடுத்து மரியாதை செய்யப்பெற்றது இந்நிகழ்வில் நமது பங்காளி வேகுப்பட்டி.எஸ் சேதுராமசாமி செட்டியார் எஸ். ஆனந்த் செட்டியார் கலந்து கொண்டார்கள்.

Read More

Karthigai Month Sangadahara Chathurthi

December 8, 2025 | News

08 Dec 2025 சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நமது ஒக்கூர் கைலாச விநாயகருக்கு இரண்டு கும்பம் வைத்து ஜெபம் அதனைத் தொடர்ந்து கோபூஜையும், கைலாச விநாயகருக்கு அபிஷேக ஆராதனையம் சிறப்பாக நடைபெற்றது. உபயதாரர்கள்.கன. சோமசுந்தரம் செட்டியார் குடும்பத்தார்கள்.தேவகோட்டைஏ. ராம. ஏ. ராமநாதன் செட்டியார் குடும்பத்தார்கள்.மகிபாலன்பட்டி இந்நிகழ்வில் நமது காரியக்காரர் ஆவணிப்பட்டி திரு லெ. பொனஅழகப்ப செட்டியார் அவர்கள் கலந்து கொண்டார்கள். வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்க பெற்றது.

Read More